‘காதலியின் வீட்டின் முன்பு’... ‘காதலனின் குலை நடுங்க வைக்கும் காரியம்’... ‘பதறவைக்கும் சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 07, 2019 08:56 PM

காதலுக்கு காதலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளைஞரின் விபரீதச் செயல் வினையாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

the young man commit suicide in front of his girlfriend

சென்னை வடபழனி துரைசாமி தெருவைச் சேர்ந்தவர் 26 வயதான இளைஞர் மொய்தீன். பிஎஸ்சி பட்டதாரியான இவர், நந்தனத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதேநிறுவனத்தில் எர்ணாவூர் கண்ணினால் லேஅவுட்டை சேர்ந்த, 23  வயதான மாலதி என்பவரும் பணிபுரிந்து வந்தார். அப்போது இவர்கள் இருவரும் நட்பாகப் பழகி, பின்னர் காதலிக்க துவங்கியுள்ளனர். இவர்களின் காதல், மாலதியின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து, அவர்கள் இதற்கு தெரிவித்தனர். மேலும், மாலதியை வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். கடந்த இரு மாதங்களாக மாலதி வேலைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

அதன்பின்னர் செல்ஃபோனில், மாலதியிடம் இளைஞர் பேசியுள்ளார். அப்போது, நமது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால், என்னை மறந்துவிடு என்று மாலதி கூறியதாகத் தெரிகிறது. இதனால் பரிதவித்துப்போன இளைஞர் மொய்தீன், கடந்த வெள்ளிக் கிழமையன்று இரவு, காதலியின் வீடு உள்ள எண்ணூர் எர்ணாவூருக்கு, தனது பைக்கில் நண்பருடன் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது காதலியின் பெற்றோர் தடுத்ததால், காதலி இல்லாமல் வாழ முடியாது எனக் கூறி, ஏற்கனவே தயாராக எடுத்து வந்திருந்த பெட்ரோலை, தனது மேலே ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதைப்பார்த்து அலறிய காதலியான மாலதி, உடனே அவரை காப்பாற்ற முயற்சி செய்து, அவரும் தீயில் சிக்கினார். இதையடுத்து, அங்கே இருந்த அக்கம்பக்கத்தினர், காதலர்கள் இருவரையும் காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் தந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, இளைஞர் மொய்தீன் உயிரிழந்தார். மாலதிக்கு தொடாந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CHENNAI #LOVERS