என்னாச்சு அவருக்கு..? ‘மருத்துவ சிகிச்சையில் பியர் கிரில்ஸ்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Sep 03, 2019 05:33 PM

‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி தொகுப்பாளரான பியர் கிரில்ஸின் முகத்தில் தேனீ ஒன்று தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bear Grylls saved by medics after bee sting knockout

டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்னும் நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இதில் அடர்ந்த காடுகளில் சிக்கிக்கொண்டால் உயிர்பிழைத்து அங்கிருந்து எவ்வாறு தப்பித்து வர வேண்டும் என பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பியர் கிரில்ஸின் முகத்தில் தேனீ தாக்கி சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு ஒன்றில் புதிய நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்புக்காக பியர் கிரில்ஸ் சென்றுள்ளார். அப்போது அந்த தீவில் கொடிய விஷதன்மையுடைய தேனீ ஒன்று அவரின் முகத்தில் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனீயால் தாக்கப்பட்டு முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு வீங்கியுள்ள பியர் கிரில்ஸின் புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BEARGRYLLS #BEE #ATTACKED #INJURY #MANVSWILD