‘குடும்பமே இறந்து கிடந்த பயங்கரம்’.. ‘14 வயது சிறுவன்’ அளித்த ‘உறைய வைக்கும் வாக்குமூலம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Sep 03, 2019 08:56 PM

அமெரிக்காவில் 14 வயது சிறுவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரையும் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

US teenager kills five family members in Alabama shooting

அமெரிக்காவின் அலபாமாவில் 14 வயது சிறுவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார். சுட்டுக்கொன்றதோடு போலீஸாருக்கும் இதுகுறித்து தகவலளித்து நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளார். சிறுவன் சுட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்ற 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.

விசாரணையில் சிறுவன் பற்றிய அடையாளம் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் கொலைக்கான காரணம் குறித்த விவரங்களும் உடனடியாக தெரியவில்லை. திங்கட்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தின்போது சிறுவன் 9மிமீ கைத்துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சிறுவனுக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது, எங்கிருந்து அதை வாங்கினார் என்பது குறித்த தகவலும் தெரியவில்லை என போலீஸார் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை துப்பாக்கி வைத்துக் கொண்டு அதை வன்முறைக்காக பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் டெக்சாஸில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியாகியதும், கடந்த மாதம் அதே பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலியாகியதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #US #TEENBOY #SHOOTING #FAMILY #DEAD #SHOCKING #GUN