‘சாதி மாறி காதலித்த இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’.. ‘அரை நிர்வாணமாக்கி’.. ‘உறவினர்கள் ஒன்றுகூடி செய்த கொடூரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 04, 2019 09:16 AM

மத்தியப்பிரதேசத்தில் சாதி மாறி காதலித்த இளம் பெண்ணை அவருடைய உறவினர்கள் அரை நிர்வாணக் கோலத்தில் அடித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young tribal girl beaten paraded over inter caste affair in MP

மத்தியப்பிரதேசம் அலிராஜ்புர் மாவட்டத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்த ஆண் ஒருவரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடிச் சென்று அவரை திரும்ப அழைத்து வந்துள்ளனர்.

அப்போது அவர்கள் சாலையிலேயே அந்தப் பெண்ணின் சேலையை உருவி அரை நிர்வாணக் கோலத்தில் அடித்து ஊர்வலமாக அவரை அழைத்து வந்துள்ளனர். இதை அங்கிருந்த ஒருவர் எடுத்த வீடியோ வாட்ஸ்அப்பில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிப் பேசியுள்ள போலீஸார், “அந்த சம்பவம் குறித்து இதுவரை எந்தவித புகாரும் எங்களுக்கு வரவில்லை. வீடியோவில் உள்ள பெண் யாரென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : #MADHYA PRADESH #TEENGIRL #LOVEAFFAIR #INTERCASTE #FAMILY #TRIBALGIRL #WHATSAPP #VIDEO #SHOCKING #VIRAL