நேருக்கு நேர் ‘மோதிக்கொண்ட’ கார் - வேன்... ‘திருமண’ வீட்டிலிருந்து திரும்பும் வழியில்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நேர்ந்த ‘பயங்கரம்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 28, 2020 11:16 AM

ராஜபாளையம் அருகே வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Rajapalayam Virudhunagar 5 Died 20 Injured In Car Van Accident

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்காசி சாலையில் வேன் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது அந்த வேனும் எதிரே சிவகாசி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதில் காயமடைந்த 20க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகே காரில் இருந்தவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், வேனில் இருந்தவர்கள் தென்காசியில் இருந்து மதுரைக்கு திருமணம் ஒன்றிற்குச் சென்றுவிட்டுத் திரும்பியது தெரியவந்துள்ளது. மேலும் காரில் இருந்தவர்கள் குற்றாலம் சென்றுவிட்டு சிவகாசி திரும்பிக்கொண்டிருந்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #RAJAPALAYAM #VIRUDHUNAGAR #CRASH #CAR #VAN #MARRIAGE