"ஆம்பள ஐஸ்வர்யா ராய் சார் நீங்க..." ஆம் ஆத்மியில் ஒரு ஆணழகன்... நான்... நீ... என போட்டி போடும் பெண்கள்... "ஒரு சீட் கன்ஃபார்ம்..."
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி சட்டசபை தேர்தலில் ராஜிந்தர் நகர் தொகுதியில் போட்டியிடும் ஆம்ஆத்மி வேட்பாளரான ராகவ் சந்த்தை திருமணம் செய்ய பெண்கள் நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு அவருடைய சமூகவலைதள பக்கங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.

31 வயது ஆடிட்டரான ராகவ், ஆம்ஆத்மி கட்சியில் இணைந்து, இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். ஆம்ஆத்மி கட்சியின் 39 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவருக்கு போகும் இடமெல்லாம் இளம்பெண்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது. இந்த ஆதரவுகள் ஓட்டுக்களாக மாறுகிறதோ இல்லையோ, திருமண விண்ணப்பங்களாக மாறுகிறது. இவரை திருமணம் செய்ய இளம்பெண்கள் நான்-நீ என போட்டிப்போட்டு வருகின்றனர்.
இவரது பிரச்சாரம் தொடர்பான வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டரில் பகிரப்பட்டு, லைக்குகளை அள்ளி வருகிறது. சமூக வலைதளங்களில் இவரை பின்தொடர்பவர்களில் பெண்களே அதிகம். ஏற்கனவே திருமணமாகி குழந்தைக்கு தாயாக இருக்கும் சில பெண்களும் ராகவை திருமணம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.
இவரது ரசிகை ஒருவர், தயவு செய்து யாரையும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். நான் மனது உடைந்து விடுவேன் என டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்த முறை அவர் பெண்களின் ஆதரவில் கண்டிப்பாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
