“நான் எடுத்து தரேன்.. கார்டை கொடுங்க!”.. வீட்டுக்கு வந்த பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jan 08, 2020 10:02 PM
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ஊர் காவல் படையில் பணியாற்றி வருவதோடு, பண்ணை பால் வாங்கி பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்து வியாபாரம் செய்து வருகிறார்.
சிட்கோ பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்மிற்கு சுரேஷ்குமார் பணம் எடுக்கச் சென்றபோது, அங்கு வந்த ஒரு நபர், சுரேஷ் குமாருக்கு உதவுவதாக கூறி முயற்சி செய்துள்ளார். அப்போது சுரேஷ் குமார் கொடுத்த போட்ட பின் நம்பரையும் அந்த நபர் கவனித்துக் கொண்டார்.
ஆனால் பணம் வரவில்லை என்று, வீட்டுக்கு வந்து பார்த்த சுரேஷ்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 19,500 ரூபாய் டெபிட் ஆகியிருப்பதாக மெசேஜ் வந்திருந்தது. அப்போதுதான், ஏடிஎம் மையத்தில் உதவி செய்வதாகச் சொன்ன நபர், சுரேஷ்குமாரின் ஏடிஎம் கார்டினை வாங்கிக் கொண்டு, அவரது கார்டினை சுரேஷ்குமாரிடம் கொடுத்து அனுப்பிவிட்டிருந்தது தெரியவந்தது.
உடனே இதுபற்றி சுரேஷ்குமார் காவல்துறையினரிடத்தில் புகார் அளிக்க, இந்த புகாரை அடுத்து, விசாரணை செய்ததில், விருதுநகர் மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கதிரேசன் (48) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.