'ஆடு மேய்க்க தங்கச்சி கூட போன பொண்ணு'... 'இந்த கோலத்துலயா பாக்கணும்'... 'தமிழகத்தை' உலுக்கியுள்ள சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 03, 2020 10:03 AM

தங்கையுடன் ஆடு மேய்க்க சென்ற சிறுமி , சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

Virudhunagar : 9 year old Missing girl found as dead, body recovered

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வேண்டுராயபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் கருப்பசாமி-ராஜலட்சுமி தம்பதி. இவர்களது ஒன்பது வயது மகள் வசந்த குருலட்சுமி, அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் தனது தங்கையுடன் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். அப்போது அவரது தங்கை மட்டும் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் வெகு நேரம் ஆகியும் வசந்த குருலட்சுமி மட்டும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் பதற்றமடைந்த பெற்றோர் மகள் குருலட்சுமியை பல இடங்களில் தேடி பார்த்துள்ளார்கள். ஆனால் மகளை காணாத நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த சூழ்நிலையில் சிறுமியின் வீட்டின் அருகிலிருந்த கிணற்றில், சிறுமி சலாடமாக மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தீயணைப்புத்துறை உதவியுடன் சிறுமியின் உடலை காவல்துறையினர் மீட்டனர்.

சலாடமாக மீட்கப்பட்ட தங்களது மகள் வசந்த குருலட்சுமியின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதார்கள். இதனிடையே மீட்கப்பட்ட சிறுமியின் உடல் சிவகாசி அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமி சடலமாக மீட்கப்பட்டது குறித்து காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு மேய்க்க சென்ற சிறுமி வசந்த குருலட்சுமி காணாமல் போய், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MISSING GIRL #WELL #VIRUDHUNAGAR #DEAD #வசந்த குருலட்சுமி