'அப்பா நான் அப்படி பட்ட பொண்ணு இல்ல'...'மனச நொறுங்க வச்ச 4 பக்க கடிதம்'...இளம் நர்சுக்கு நடந்த கோரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉண்மை தன்மையை அறியாமல் நாம் ஒருவர் மீது போடும் பழி, எந்த அளவிற்கு ஒருவரது வாழ்க்கையை புரட்டி போடும் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது இந்த சம்பவம். மனதை உருக்கும் சம்பவம் குறித்த செய்தி குறிப்பு.

சித்தூர் அடுத்த மதனப்பள்ளி வந்தாடிவாரிபள்ளியை சேர்ந்தவர் ராசப்பா. இவருடைய மனைவி பார்வதி. விவசாயம் செய்து வரும் ராசப்பாக்கு 4 மகள்கள். கஷ்டத்தில் இருந்த போதும் தனது மகள்களை ராசப்பா நன்றாக படிக்க வைத்தார். அவரது 3-வது மகள் சாலம்மா என்ற சாவித்திரி (வயது24). பி.எஸ்.சி. நர்சிங் முடித்து விட்டு மதனப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு ஆண்டாக நர்சாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சாவித்திரி இரவு பணிக்கு சென்றிருந்தார். அப்போது சாவித்திரி பரிசோதனை செய்து கொண்டிருந்த வார்டில் உள்ள ஒரு நோயாளியின் ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நோயாளி மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் அளித்தார். அந்த நேரத்தில் வார்டில் சாவித்திரி இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் சாவித்திரியை அழைத்து விசாரணை நடத்தினர்.
மேலும் மருத்துவமனையில் நோயாளி உடனிருந்த நோயாளியின் உதவியாளரும், ஊழியர்களும் பணத்தை சாவித்திரி தான் திருடியிருக்க வேண்டும் என்று கூறி வந்தனர். இதனை சற்றும் எதிர்பாராத சாவித்திரி மிகுந்த மனவேதனை அடைந்தார். மருத்துவமனையில் அவர் அடைந்த அவமானத்தை நினைத்து கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிலும் மருத்துவமனையில் நடந்ததை நினைத்து கொண்டிருந்த அவர், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, சாவித்திரி 4 பக்கம் கொண்ட உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், ''அப்பா நான் எந்த பொருளையும் திருடவில்லை. நான் அப்படி பட்ட பெண்ணும் இல்லை. மருத்துவமனையில் நடந்த அவமானத்தை என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. அதனால் நான் இந்த முடிவை தேடி கொள்கிறேன்'' என உருக்கத்துடன் கூறியுள்ளார்.
மகளின் மரணத்தால் நிலைகுலைந்து போயியுள்ள சாவித்திரியின் பெற்றோர், மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.
