'கஷ்டத்துல இருக்கறவங்களுக்கு கை குடுங்க' ... பசியோடு வரும் மக்களின் குறை தீர்க்கும் ... விஜய் ரசிகர்களின் 'விலையில்லா உணவகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 15, 2020 11:51 AM

ஏழை மக்களுக்கு தினமும் இலவச காலை உணவு வழங்க விலையில்லா விருந்தகம் ஒன்றை விஜய் ரசிகர்கள் ஒன்றை வேலூரில் திறந்துள்ளனர்.

Vijay Makkal Iyakkam in Vellore starts free canteen

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மக்களுக்காக 'விலையில்லா விருந்தகம்' மாவட்டந்தோறும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் 'விலையில்லா விருந்தகம்' சமீபத்தில் திறக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் ஆனந்த் கலந்து கொண்டார். இந்த விருந்தகம் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களில் காலை 7:30 முதல் 8:30 மணி வரை 109 பேருக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி அனைவரும் மாஸ்க் அணிந்து உணவு பரிமாறினர். இது குறித்து வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் வேல்முருகன் கூறுகையில், 'ஏழை மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என விஜய் அவர்கள் கூறியுள்ளார். அதனை கருத்தில் கொண்டு மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகள் ஒவ்வொருவராக தினமும் உணவுக்கான செலவை ஏற்றுக் கொள்கிறோம்' என்றார்.

இட்லி, பொங்கல் என தொடர்ந்து 321 நாட்களுக்கு இலவசமாக காலை உணவுகள் வழங்க வேலூர் மக்கள் இயக்க நிர்வாகிகள் திட்டம் வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #THALAPATHY VIJAY #VIJAY MAKKAL IYAKKAM #VELLORE