VIDEO: ‘கோயில் கருவறைக்குள் ஊஞ்சல் ஆடிய அம்மன்’!.. ‘குவியும் பக்தர்கள் கூட்டம்’!.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Dec 13, 2019 05:51 PM
அந்தியூர் அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மன் ஊஞ்சல் ஆடியதாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. கடந்த 10-ம் தேதி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோயிலில் விளக்கேற்றப்பட்டு பூஜை நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து வழக்கம்போல கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது. பின்னர் மறுநாள் கோயில் நிர்வாகிகள் கோயிலை திறந்துவிட்டு எதர்ச்சியமாக சிசிடிவி கேமாரா காட்சிகளை பார்த்துள்ளனர்.
அப்போது கோயில் கருவறை முன் உள்ள திரைச்சீலையில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் அசைவதைப் பார்த்துள்ளனர். ஒருவேளை தீ பற்றியதால் ஏற்பட்ட அசைவாக இருக்குமோ என சோதனை செய்துள்ளனர். ஆனால் அப்படி எந்தவொரு தீ விபத்தும் நடக்கவில்லை என்பதை கண்டறிந்து மீண்டும் சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளனர்.
அப்போது கருவறையில் ஒரு பெண் உருவம் செல்வது போன்றும், பின்னர் திரைச்சீலையை தொடுவதுமாக இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 2 மணிநேரம் இந்த காட்சியைப் பார்த்து கோயில் நிர்வாகிகள் பிர்மித்துப் போயுள்ளனர். சிசிடிவி கேமராவில் எதாவது பூச்சி, சிலந்தி இருக்கின்றதா என ஆராய்ந்து பார்த்துள்ளனர். ஆனால் அப்படி எந்த பூச்சியும் கேமாராவில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் வேகமாக பரவ மக்கள் கூட்டம் கூட்டமாக வந்த அம்மனை தரிசிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.