‘அலைச்சறுக்கு’ விளையாட்டின்போது.. ‘திடீரென’ தாக்கிய சுறா.. ‘அடுத்த நொடி’ நடந்த ‘அதிசயம்’.. ‘பதறவைக்கும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 05, 2019 07:34 PM

அமெரிக்காவில் அலைச்சறுக்கு விளையாடிய  சிறுவன் சுறாவிடம் சிக்கி தப்பிக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

Viral Video Shark Knocks Off 7 Year Old Boy Surfer From Board

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள நியூஸ்மிர்னா கடற்கரையில் சுறாவிடம் சிக்கிய ஒரு சிறுவன் எந்தவித காயமுமின்றி தப்பியுள்ள சம்பவம் நடந்துள்ளது. வார இறுதியில் தந்தையுடன் கடற்கரைக்குச் சென்ற 7 வயது சிறுவன் சாண்ட்லர் மூட் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

சிறுவன் சாண்ட்லர் அலையில் உற்சாகமாக சறுக்கி விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென எதிரே சுறா மீன் வருவதைப் பார்த்து பயந்து தண்ணீரில் குதித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அடுத்த நொடி அந்த சுறா எதிர்திசையில் சென்றுவிட்டதால் அந்த சிறுவன் காயம் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளார். சிறுவனின் அலைச்சறுக்கு படகில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Tags : #BOY #SHARK #VIRAL #VIDEO #SURFING