‘ரயில் முன்’ சிக்கிய பயணி.. ‘தன் உயிரையும்’ பொருட்படுத்தாமல் காவலர் செய்த காரியம்.. ‘நூலிழையில்’ தவிர்க்கப்பட்ட ‘பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 06, 2019 12:42 PM

மும்பை ரயில் நிலையத்தில் தன் உயிரைப் பணயம் வைத்து காவலர் ஒருவர் பயணியை ரயில் மோதாமல் காப்பாற்றியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Video Police Risks Life To Save Man From Being Run Over By Train

மும்பை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது திடீரென ரயில் வருவதைப் பார்த்து பயணி ஒருவர் அதிர்ச்சியடைந்து தடுமாறியுள்ளார். அதைப் பார்த்த பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் அனில் குமார் உடனடியாக கீழே குதித்து அந்த பயணியை பிளாட்பாரம் மீது ஏற்றிவிட்டு ரயில் வரும் முன் நொடிப்பொழுதில் தானும் உயிர் தப்பியுள்ளார்.

தக்க சமயத்தில் ஓட்டுநரும் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த பதறவைக்கும் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாக, அந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

 

 

Tags : #MUMBAI #POLICE #ACCIDENT #TRAIN #VIDEO #VIRAL