‘துணிச்சலுடன்’ மீட்க இறங்கியவரின் உடலை ‘சுற்றிய’ மலைப்பாம்பு... நொடியில் கிணற்றுக்குள் ‘தவறிவிழுந்த’ பயங்கரம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 12, 2019 05:42 PM

வனத்துறை ஊழியர் ஒருவர் துணிச்சலுடன் கிணற்றுக்குள் இறங்கி மலைப்பாம்பை மீட்க முயற்சிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Video Of Kerala Man Rescuing Snake From Well Goes Viral

கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள பெராமங்கலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிற்குள் மலைப்பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற சாகில் என்ற வனத்துறை ஊழியர் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி பாம்பை மீட்க முயற்சித்துள்ளார்.

நீண்ட முயற்சிக்குப் பிறகு பாம்பைப் பிடித்த அவர் மேலே ஏற முயற்சித்தபோது பாம்பு அவருடைய உடலை சுற்றி வளைக்கத் தொடங்கியுள்ளது. ஆனாலும் பாம்பை பிடித்துக்கொண்டே அவர் கயிற்றைப் பிடித்து மேலே ஏற முயற்சித்துள்ளார். அப்போது அவர் நொடியில் திடீரென பாம்புடன் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதையடுத்து நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள சாகில், “முதலில் கன்னி வைத்துதான் பாம்பை பிடிக்க முயற்சித்தோம். ஆனால் கிணறு ஆழமாக இருந்ததால் நானே உள்ளே இறங்கி பாம்பைப் பிடிக்க முயற்சித்தேன்” எனக் கூறியுள்ளார். சாகில் கிணற்றுக்குள் இறங்கி மலைப்பாம்பை பிடிக்க முயற்சிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Tags : #KERALA #SNAKE #PYTHON #VIRAL #VIDEO #WELL