நீங்க தான் எப்போதுமே ‘என்னோட கேப்டன்’.. ‘ட்விட்டரைக் கலக்கிய’ கோலியின் ‘வாழ்த்து ட்வீட்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Dec 10, 2019 05:01 PM

2019ஆம் ஆண்டு ட்விட்டரில் விளையாட்டுத் துறையில் அதிக லைக் மற்றும் ரீட்வீட் செய்யப்பட்ட பதிவாக தோனிக்கு கோலி பிறந்த நாள் வாழ்த்து கூறிய ட்வீட் இடம்பெற்றுள்ளது.

Virat Kohlis Special Tweet For MS Dhoni Tops On Twitter in 2019

ட்விட்டர் இந்தியா ThisHappened2019 என்ற ஹேஷ்டேக்கின் கீழ் 2019ஆம் ஆண்டு ட்விட்டரில் நடந்த சாதனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் விளையாட்டுத் துறையின் கீழ் அதிக லைக் மற்றும் ரீட்வீட் செய்யப்பட்ட பதிவாக தோனியின் பிறந்த நாளுக்கு கோலி வாழ்த்துக் கூறிய ட்வீட் சாதனை படைத்துள்ளது. அந்த ட்வீட் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது மற்றும் 45 ஆயிரத்திற்கும் அதிகமான முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.

அந்த ட்வீட்டில் கோலி, “பிறந்த நாள் வாழ்த்துக்கள் மஹி பாய். ஒரு சிலரால் மட்டுமே நம்பிக்கை மற்றும் மரியாதையின் அர்த்தத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியும். அதில் ஒருவரான உங்களுடன் நீண்ட கால நண்பராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எங்கள் அனைவருக்குமே சகோதரராக இருக்கிறீர்கள். நான் முன்பே சொன்னதைப் போல நீங்கள் தான் எப்போதுமே என்னுடைய கேப்டன்” என வாழ்த்துக் கூறியுள்ளார்.

 

 

Tags : #MSDHONI #VIRATKOHLI #TWITTER #TEAMINDIA #VIRAL #TRENDING #CAPTAIN