‘விக்கெட்’ எடுக்கலன்னா என்ன... பந்து கிடைத்தும் ‘ரன் அவுட்’ ஆக்காமல்... இதயங்களை ‘வென்ற வீரர்’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Dec 11, 2019 04:02 PM

மான்சி சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை பந்துவீச்சாளர் ஒருவருடைய செயல் அனைவரது இதயங்களையும் வென்றுள்ளது.

SriLanka Bowler Isuru Udana Refuses To RunOut Injured Batsman

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியின்போது பரபரப்பான கட்டத்தில் இலங்கை பந்துவீச்சாளர் இஸுரு உடானா பந்துவீசியுள்ளார். பேட்டிங் செய்துகொண்டிருந்த நெல்சன் மண்டேலா பே ஜெயின்ஸ் அணிக்கு வெற்றி பெறுவதற்கு 8 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பேட்ஸ் மேன் பந்தை அடித்துள்ளார்.

அப்போது பேட்ஸ்மேன் பலமாக அடித்த பந்து எதிர் திசையில் இருந்த பேட்ஸ்மேனைத் தாக்கி பந்துவீச்சாளர் அருகிலேயே சென்று விழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து பந்துவீச்சாளர் உடானாவுக்கு பந்தை கையில் எடுத்து ரன் அவுட் செய்யும் வாய்ப்பு கிடைத்தும், அவர் வலியால் துடித்துக்கொண்டிருந்த வீரரை ரன் அவுட் செய்யாமல் அடுத்த பந்தை வீசச் சென்றுள்ளார். உடானாவின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு, தற்போது அந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

 

 

Tags : #CRICKET #SRILANKA #ISURUUDANA #VIRAL #VIDEO #MSL