திடீரென காரை ‘உடைத்துக்கொண்டு’ வளர்ந்த மரம்.. ‘ஆச்சரியத்தை’ ஏற்படுத்திய ‘வைரல் வீடியோ’.. ‘எப்படி வளர்ந்ததென வெளிவந்த உண்மை’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 09, 2019 08:06 PM

பிரான்ஸில் காரை உடைத்துக்கொண்டு மரம் ஒன்று வளர்ந்திருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

Viral Video Fact Check Mystery Tree Grows Through Car Overnight

பிரான்ஸில் உள்ள நன்டஸ் நகரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை உடைத்துக் கொண்டு மரம் ஒன்று வளர்ந்திருந்துள்ளது. அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த அப்பகுதியினர் அதை வீடியோ, புகைப்படங்கள் எடுத்துப் பகிர அவை வைரலாகப் பரவியுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மரத்தைப் பற்றி பல புனை கதைகள் பரவத் தொடங்கியுள்ளன. காரை உடைத்துக்கொண்டு மரம் வளர்ந்திருந்ததைப் பலரும் மாயாஜாலம் என கூற, பின்னரே அந்த மரம் அவ்வாறு வளர்ந்தது எப்படி என்ற உண்மை வெளிவந்துள்ளது.

உண்மையாகவே அது காரை உடைத்துக்கொண்டு வளர்ந்த மரமல்ல, ராயல் டீலக்ஸ் தியேட்டர் என்ற கம்பெனியால் உருவாக்கப்பட்ட ஆர்ட் வொர்க்கே என்பது தெரிய வர, அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதையடுத்து அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தாலும், அவ்வப்போது அந்த மரம் குறித்த தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது தொடர்ந்து வருகிறது.

Tags : #CAR #TREE #MYSTERY #VIRAL #VIDEO #FRANCE #ARTWORK