கொஞ்சம் ‘ஓவரா தான்’ போய்ட்டோமோ?.. ‘பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் முடியாமல்’.. ‘பொங்கி எழுந்த மாப்பிள்ளை’..
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Saranya | Dec 05, 2019 08:38 PM
திருமண நிகழ்வில் உறவினர் ஒருவர் விளையாட்டாக தொடர்ந்து சீண்ட மாப்பிள்ளை பொங்கி எழுந்து அவரைத் தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நிறைந்திருக்கும் திருமண விழாவில் நடந்த சம்பவம் ஒன்றின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமண மேடையில் மணப்பெண்ணுடன் மாப்பிள்ளை அமர்ந்திருக்க, அவர்களுக்கு பின்னால் நின்றுகொண்டு உறவினர் ஒருவர் மாப்பிள்ளையை விளையாட்டாக சீண்டிக் கொண்டே இருக்கிறார்.
சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த மாப்பிள்ளை ஒருகட்டத்தில் பொறுமையை இழந்து எழுந்து, சீண்டிய உறவினரைத் தாக்குகிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணப்பெண் அவரைத் தடுக்க, அப்போதும் அவர் விடாமல் அந்த உறவினரைத் தாக்குகிறார். மாப்பிள்ளை பொறுமை இழந்து தாக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
shaadi do dilon ka milan hai.. oh wait pic.twitter.com/o9nKeFdZJH
— Godman Chikna (@Madan_Chikna) December 5, 2019