'பிரிந்து சென்ற காதல் மனைவி'... 'டிக் டாக் வீடியோ பதிவிட்டு'... 'இளைஞர் எடுத்த விபரீத முடிவு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Dec 05, 2019 09:23 PM

காதல் மனைவி பிரிந்து சென்றதால், இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றம் செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

youth recorded tik tok video and committed suicide

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் மண்ட்பேட்டா பார்த்தசாரதி நகரைச் சேர்ந்தவர் டோலி விஜயகுமார் (21). இவர் அங்குள்ள துணிக்கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலைப் பார்த்து வந்தபோது, அங்கே பணிபுரிந்து வந்த மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.  பின்னர் இளம் பெண்ணின் வீட்டின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், அந்தப் பெண் மைனர் என்று கூறி, அவரது பெற்றோர் தங்களது மகளை அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின்னர், இருவரும் சந்திக்க முடியாததால் செல்ஃபோனில் பேசி வந்துள்ளனர்.

அதன்பின்னர் தனது மனைவியை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றும் முடியாததால், விஜயகுமார் மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர், தனது காதலியான மனைவியிடம் தனது அன்பை கொண்டு சேர்க்குமாறு கூறி, உருக்கமான டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன் பிறகு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை, குடும்பத்தினர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TIKTOK #VIDEO #VIRAL