‘லாரியில் வந்து ஒரே வீட்டில் தங்கியிருந்த 25 பேர்’.. போலீஸுக்கு வந்த ரகசிய தகவல்.. வேலூரில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒரே வீட்டில் ஒன்றாக தங்கியிருந்த 25 வடமாநிலத்தை சேர்ந்த நபர்களிடம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வேலூர் சேண்பாக்கம் பகுதியிக்கு நேற்று லாரி மூலம் 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அப்பகுதியில் வீடு ஒன்றில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீசார் மற்றும் சுகாதார துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரே அறையில் 25 பேர் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் தமிழகம் முழுவதும் பெட்சீட், தலையணைகள் விற்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக ரயில்கள் இயக்கப்படாததால் காட்பாடி ரயில் நிலையத்தில் அவர்கள் தவித்துள்ளனர். பின்னர் தங்கள் குழுவை சேர்ந்தவர்கள் வேலூர் செண்பாக்கத்தில் இருப்பது தெரியவந்து அங்கு அனைவரும் வந்துள்ளனர். இதனை அடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அங்கேயே அவர்களை போலீசார் தங்க வைத்துள்ளனர்.
