‘தமிழகத்தில் இரு தனியார் ஆய்வகங்களில்’... ‘கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்’... ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 23, 2020 08:58 PM

தமிழகத்தில் இரு தனியார் மருத்துவமனை ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

ICMR approves 2 privates laboratories in Tamilnadu to test COVID-19

தமிழகத்தில் சென்னை, தேனி, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முதற்கட்டமாக பல்வேறு மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியது.

இன்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை மற்றும் சென்னை அப்போலோ தனியார் மருத்துவமனை ஆய்வகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் இலவசமாக இந்த சோதனை நடத்தப்படும் நிலையில், தனியார் ஆய்வகங்கள் 4500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags : #APOLLOHOSPITAL #HOSPITAL #CMC #VELLORE