‘சுடிதாருடன் மிதந்த சடலம்’.. பெண்ணா?.. திருநங்கையா?.. வேலூர் கோட்டையை அதிரவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 19, 2020 06:42 AM

வேலூர் கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Unknown dead body found in Vellore Fort, Police investigate

வேலூர் கோட்டைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு எதிரொலியால் சுற்றுலா பயணிகள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கோட்டை அகழியில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட உடல் சுடிதார் மற்றும் பேண்ட் அணிந்திருந்ததால், அவர் பெண்ணா? அல்லது திருநங்கையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தற்கொலையா? அல்லது கொலை செய்யப்பட்டு அகழியில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத சடலம் வேலூர் கோட்டை அகழியில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #POLICE #DEADBODY #VELLORE