‘கோரதாண்டவம் ஆடும் கொரோனா’.. ஆசியாவை விட பலி எண்ணிக்கை இங்கதான் அதிகம்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆசியாவை விட ஐரோப்பாவில் அதிகமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தின் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவிய இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பா நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வருகிறது.
இந்த நிலையில் ஆசியா நாடுகளை விட ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,384. ஆனால் ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,421 என தகவல் வெளியாகியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
