'மத்ததெல்லாம் உதறித் தள்ளுங்க'... 'முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு'... 'பிசிசிஐ அதிரடி உத்தரவு'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Sep 13, 2019 08:41 PM
இரட்டைப் பதவி ஆதாய விவகாரத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு, பிசிசிஐயின் நெறிமுறைகளுக்கான அதிகாரி, இமெயில் ஒன்று அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் (CAB), பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி (CAC) மற்றும் ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகர், உள்ளிட்ட 3 பொறுப்புகளில் அங்கம் வகித்து வருகிறார். தற்போது இதுதான் அறிவுரைக்கு காரணம் ஆகும். ஒரே நேரத்தில் இவ்வாறு 3 பொறுப்புகளில் இருப்பது, ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளில் அங்கம் வகிப்பதாக பார்க்கப்படுமென, பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ நெறிமுறைகளுக்கான அதிகாரி டி.கே.ஜெயின், ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், ‘பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டிக் குழுவில் உள்ள கங்குலி, ஐபிஎல் மற்றும் சிஏபி உள்ளிட்ட பொறுப்புகளில் வகிப்பது ஆதாயம் தருவதாக உள்ளது. இதுதொடர்பான கங்குலியின் விளக்கம், ராஜிநாமா அறிவிப்பாகவே கருதப்படும்.
எனவே ஐபிஎல் பொறுப்பில் உள்ள பதவி, 2019 மே மாதத்துடன் முடிவுக்கு வரவேண்டும். தற்போதைய நிலையில் ஆதாயம் தரும் பதவியை அவர் வகிப்பதாகவே உள்ளது. ஆதாயம் தரும் பதவியை விட்டு கங்குலி விலகவேண்டும். ஒரு பதவிக்கு மேல் அவர் பொறுப்பேற்கக்கூடாது. இதனை அவர் உறுதி செய்ய பிசிசிஐ -ஐ அறிவுறுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முன்னாள் வீரர்களான சச்சின், ட்ராவிட், லக்ஷமணை தொடர்ந்து கங்குலிக்கும் இதில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.