‘ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த 2 ரயில்கள்’.. சென்னை அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 10, 2019 11:02 AM

வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிரெதிரே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Two trains collide same railway risk collision near Chennai

சென்னையில் ஏற்பட்டு வரும் தண்ணீர் தட்டுபாட்டின் விளைவாக சில மாதங்களாக ஜோலார் பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னைக்கு தண்ணீர் ஏற்ற ஜோலார் பேட்டை நோக்கி சென்ற ரயிலும், ஜோலார் பேட்டையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற ரயிலும் ஒரே தண்டவளாத்தில் எதிரெதிரே சென்றுள்ளது.

இதனையறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனே தகவல் கொடுத்து இரு ரயில்களையும் நிறுத்த அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து இரு ரயில்களும் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நிறத்தப்பட்டது. இதனால் பேராபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. மேலும் இவ்வழியே செல்லும் அனைத்து ரயில்களும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் எப்படி வந்தது என ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #RAILWAY #INDIANRAILWAYS #CHENNAI #TRAIN