‘சென்னையில் ஐடி நிறுவனத்துக்கு வந்த மிரட்டல்’... ‘போலீசார் தீவிர விசாரணை’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 10, 2019 11:39 PM

சென்னை கந்தன்சாவடியில் உள்ள ஐ.டி. நிறுவனத்துக்கு, தொலைபேசியில் மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

bomb threat to chennai IT building, police alert

சென்னை, கந்தன்சாவடியில் இயங்கி வரும் பிரபல ஐ.டி. நிறுவனத்துக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தொலைபேசியில் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், உடனடியாக அலுவலக வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

13 தளங்களை கொண்ட ஐ.டி. நிறுவனத்தின், அனைத்து வளாகங்களிலும் தற்போது தீவிர சோதனை நடைப்பெற்றது. பின்னர் அது வெறும் புரளி என தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ITEMPLOYEE #CHENNAI #BOMB #THREAT