அரை நிர்வாணமாக வந்து... பெண்களின் ஆடைகளை 'திருடும்' சைக்கோ... பதறவைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 01, 2020 11:47 PM

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள நியூ காலனியில் தனியார் குடியிருப்பு கட்டிடத்தின் உள்ளே சைக்கோ ஒருவர் அரை நிர்வாணமாக வந்து, பெண்களின் உடைகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Unknown Person steals ladies dress in Chennai Apartment

வழக்கம்போல காலையில் எழுந்த குடியிருப்புவாசிகள் தங்களது வீடுகளின் ஜன்னல்கள் திறந்து கிடந்ததால், அதிர்ச்சியடைந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில், இரவில் நபர் ஒருவர் மேலாடையின்றி வந்து ஒவ்வொரு வீட்டின் கதவாக திறந்து கையில் கிடைக்கும் பொருட்கள், பெண்களின் ஆடைகளை திருடிச்செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து குடியிருப்புவாசிகள் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் சைக்கோ யார்? எதற்காக பெண்களின் ஆடைகளை திருடுகிறார் என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Tags : #CCTV #POLICE