எங்களை 'தேடாதீங்க'... வேற மாதிரி 'முடிவு' எடுத்திருவோம்... கடிதம் எழுதிவைத்து விட்டு... 'தலைமறைவான' குடும்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 01, 2020 11:04 PM

எங்களை தேடினால் வேறு முடிவை எடுப்போம் என கடிதம் எழுதிவைத்து விட்டு, தலைமறைவான குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

Family left the village for credit issues, police investigate

ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள மொடச்சூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் யஷ்ணன்(32). மருந்து பிரநிதியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ரிஜானா(26) என்னும் மனைவியும் 7 வயதில் மகன் ஒருவனும் உள்ளனர். யஷ்ணன் நகைகளை அடகுவைத்து அதை மீட்க முடியாமலும், கடன் தொல்லையாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 23-ம் தேதி அவர்கள் அனைவரும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர்.

அந்த கடிதத்தில், ''எங்களை யாரும் தேட வேண்டாம். கடன்-நகைகளை மீட்க முடியாததால் நாங்கள் வேறு எங்கேயாவது சென்று பிழைத்துக் கொள்கிறோம். எங்களை தேட எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம் அப்படி தேடினால் நாங்கள் வேறு மாதிரி முடிவு எடுப்போம்,'' எழுதிவைத்து சென்றுள்ளனர். இதற்கிடையில் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #POLICE