'அசுர வேகத்தில் வந்து ஓவர் டேக்'...'கட்டுப்படுத்த முடியாத வேகம்'...உறையவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 27, 2019 08:03 PM

கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மற்றோரு இருசக்கர வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CCTV Footage of Accident Shows Two Vehicles Colliding Extensively

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெண்ணங்கூர் என்னுமிடத்தில் தனியார் பேருந்தை இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் முன்னேறிச் செல்ல முயன்றுள்ளனர். அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், எதிர்திசையில் வந்த மற்றோரு நபரை கவனிக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த கோர விபத்தில் அதிவேகத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டார். மேலும் தலைகவசம் அணியாமல் சென்ற மோகன் என்ற அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்தில் காயம் அடைந்த மற்ற மூவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #CCTV #COLLIDING #VEHICLES #KRISHNAGIRI