'லேட்டா வந்தா கம்ப்ளெய்ண்ட் பண்ணுவியா?'.. 'சூப்பர்வைசரை புரட்டி எடுத்த டெலிவரி பாய்'.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 30, 2019 11:41 AM

ஹைதராபாத்தில் கடை ஊழியரைத் தாக்கியதாக டெலிவரி பாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

supervisor assaulted by delivery boy in Hyderabad

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில்  ASCA மேனேஜ்மெண்ட் சர்வீஸ் என்கிற நிறுவனத்துக்கு தேவையான பொருட்களை ஊழியர் ஒருவர் டெலிவரி செய்துள்ளதாகவும், ஆனால் டெலிவரி ஊழியர் தாமதமாக வந்து டெலிவரி செய்ததாக  ASCA மேனேஜ்மெண்ட் ஊழியர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரினால், டெலிவரி ஊழியர் கோபாமாகி,  ASCA மேனேஜ்மெண்ட் சர்வீஸ் நிறுவனத்தின்  மேற்பார்வையாளர் சிவராமிடம் வந்து தகராறு செய்ததோடு, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சிவராம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இந்நிலையில் டெலிவரி ஊழியர் முனீர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : #VIDEO #CCTV #HYDERABAD