‘வலது கையில் சிங்க முத்திரை’.. ‘இடது கையில் சிகரெட் சூடு’.. அம்மன் கோயில் அருகே முகம் எரிக்கப்பட்டு கிடந்த சடலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 17, 2020 08:43 AM

பட்டுக்கோட்டை அருகே முகம் எரிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Unknown man dead body found near Amman temple in Pattukkottai

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சதோப்பு வடக்கு அம்மன்நகர் அருகே அம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பின்புறம் உள்ள அடர்ந்த முட்பகுதியில் ஆணின் சடலம் கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனே இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்து வரைவழைத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்தவரின் இடது காது சிறிய அளவில் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வலது கையில் சிங்கம் முத்திரை கொண்ட பச்சை குத்தப்பட்டு இருந்துள்ளது. இடது கையில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டிருந்துள்ளது.

மேலும் இவருடைய முகம் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #POLICE #PATTUKKOTTAI