‘நள்ளிரவில்’ வீடு திரும்பிய ‘மகனால்’... தூங்கிக் கொண்டிருந்த ‘தாய்க்கு’ நேர்ந்த ‘கொடூரம்’... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 15, 2020 03:45 PM

கிருஷ்ணகிரியில் மகனே தாயை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Krishnagiri Youth Arrested For Killing Mother Over Property Issue

கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவிலை சேர்ந்தவர் பாக்யலட்சுமி (43). இவருடைய மகன் சதீஷ்குமார் (24). கடந்த 4 ஆண்டுக்கு முன் இவருடைய கணவர் இறந்துவிட்ட நிலையில், கடன் பிரச்சனை காரணமாக பாக்யலட்சுமி தனக்கு சொந்தமான வீட்டுமனையை வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். இதனால் தாய்க்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற சதீஷ்குமார் பின் நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது அவர் வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த பாக்யலட்சுமியின் தலையில் உருட்டு கட்டையால் அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாக்யலட்சுமி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சதீஷ்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசாரிடம் சரண் அடைந்து நடந்ததை கூறியுள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாக்யலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சொத்து தகராறு காரணமாக மகனே தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #KRISHNAGIRI #MOTHER #SON #PROPERTY