‘மானிட்டரை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு’.. பெண் காவல் ஆய்வாளரின் வீட்டு ‘வேலைக்கார பெண் பார்த்த வேலை!’.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 13, 2020 05:52 PM

தூத்துக்குடியில் சிபிசிஐடி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சபிதா. இவரது கணவர் நெல்லையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

home maid caught with affair in Police womans house CCTV

இந்நிலையில் இவர்களது வீட்டில் வேலை பார்த்து வந்த மாரியம்மாள் என்கிற பெண், தன் மீது சபிதா திருட்டு பழி சுமத்தியதாகவும், இதுபற்றி நியாயம் கேட்க வந்த தனது சகோதரர் சங்கரையும் தன்னையும் காவல் ஆய்வாளர் சபிதா தாக்கியதாகவும் கூறியதோடு அதனை வீடியோவாக வெளிவிட்டுவிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டார்.

இதுகுறித்து விசாரித்தபோது, சபிதாவின் வீட்டில் யாரும் இல்லாதபோது, வேலைக்கார பெண் மாரியம்மாள் செய்த காரியம் சிசிடிவி மூலம் தெரியவந்தது. சபிதாவும் அவரது குடும்பத்தினரும் வீட்டை வேலை நிமித்தமாக வெளியே சென்ற பின்னரும், அவர்களது குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின்னரும், வேலைக்காரி மாரியம்மாளைப் பார்க்க யாரோ ஒருவர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வீட்டுக்கு வருகிறார். அவரை மாரியம்மாள் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு படுக்கையறை வரை சென்று பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அதற்குள், சபிதாவின் மாலை டியூஷன் சென்ற சபிதாவின் மகன் புத்தகத்தை மறந்துவிட்டதாக திரும்பி வர, அவனை வீட்டுக்குள் வரவிடாமல் தடுத்து மாரியம்மாள் அலைக்கழித்துள்ளார். அதற்குள் அந்த நபர் வீட்டுக்குள் பதுங்க, சிறுவன் வீட்டுக்குள் வந்து திரும்பி செல்லும்போது இன்னொரு செறுப்பை கண்டுள்ளான். இதுபற்றி காவல் ஆய்வாளர் சபிதாவுக்கு தெரியவர, அப்போதுதான் வேலைக்காரியை பார்க்க பல நாட்கள் இப்படி சங்கர் என்கிற நபர் வந்துபோனதும், இருவரும் சேர்ந்து பணம், நகைகளை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து இருவரின் மீதும் சபிதா புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் சங்கர் சபிதாவிடம் சென்று வாக்குவாதம் செய்ய முயன்றபோதுதான் சபிதா சங்கரை தாக்க முயன்றுள்ளார். இதனை அடுத்து திருட்டு மற்றும் கொலைவழக்குகளில் சங்கர் மற்றும் மாரியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் சபிதாவின் வீட்டில் சிசிடிவி கேமரா மட்டும் இல்லை என்றால் சபிதா அராஜக காவலராக சித்தரிக்கப்பட்டிருப்பார் என்று கூறுகின்றனர் காவலர்கள். 

சிசிடிவி கேமராக்களில் தான் செய்யும் தவறு தெரியாமல் இருக்க மாரியம்மாள் மானிட்டரை அணைத்து வைத்திருக்கிறார். ஆனால் மானிட்டரை அணைத்துவைத்தாலும் சிசிடிவி கேமராவில் பதிவாகும் என தெரியாமல் தொடர் தவறுகளை செய்துள்ளார் மாரியம்மாள். ஒருவேளை அவர்களது நோக்கம் பணம், நகையாக இல்லாவிட்டால், சபிதா வீட்டில் இல்லாத நேரத்தில் சபிதாவின் குழந்தைகளுக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்கிறன்றனர் அப்பகுதி மக்கள்.

Tags : #CCTVFOOTAGE #POLICE #THOOTHUKUDI