'இறந்த' பின்னும் மகனுக்கு 'தூக்க' மாத்திரைகளை கொடுத்து ... மகளுக்கு அவசர 'கல்யாணம்' நடத்திய தாய்... 3 வருடங்களுக்குப்பின் வெளியான ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 16, 2020 12:35 AM

கன்னியாகுமரி பகுதியில் 3 வருடங்களுக்கு முன் நடைபெற்ற கொலையில், பெற்ற தாயே மகனைக் கொலை செய்ததை போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

School Student murder secret, revealed after 3 Years

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் வசந்தா (49). வசந்தாவின் கணவர் பிரிந்து சென்ற நிலையில் மகன் லால் கிருஷ்ணன்(13) மற்றும் மகள் ஆகியோருடன் வசந்தா வசித்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஒருநாள் பள்ளியில் இருந்து திரும்பிய மகன் லால் கிருஷ்ணன் தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விட்டதாக வசந்தா சத்தம் போட்டார்.

இதைக்கேட்ட அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து லால் கிருஷ்ணனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின் லால் கிருஷ்ணனின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால் மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக வசந்தாவின் கணவர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தனர். ஆனால் எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 1 வருடத்திற்கு முன் சுபனன் என்னும் 35 வயதுக்காரருக்கு வசந்தா தன்னுடைய மகளை திருமணம் செய்து வைத்தார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட இதையடுத்து வசந்தா மற்றும் சுபனன் இருவரையும் போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். '

இதில் இருவருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரிய வந்தது. இது லால் கிருஷ்ணனுக்கு தெரிய வரவும் அவன் வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டி இருக்கிறான். இதையடுத்து சுபனன், கிருஷ்ணனின் கழுத்தை இறுக்கிக்கொலை செய்ய, தாய் வசந்தா அதற்கு உதவி செய்து இருக்கிறார். தொடர்ந்து சுருண்டு விழுந்த மகனின் வாயில் தூக்க மாத்திரைகளை போட்டு வசந்தா தண்ணீர் ஊற்றி இருக்கிறார். இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவர தற்போது சுபனன், வசந்தா இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.