'ஆன்மிக நாட்டத்தால் திருவண்ணாமலை வந்து... சிவனடியாராக மாறிய அமெரிக்கர்!'... 'எரித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்!'... பதைபதைக்க வைக்கும் கோரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 15, 2020 02:45 PM

முக்தியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் திருவண்ணாமலை வந்த அமெரிக்கர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

spritually inspired american murdered suspiciously

அமெரிக்கா அலம்பாமா மாகாணத்தைச் சேர்ந்த ஜான் ராபர்ட்ஸ் ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதன் விளைவாக, முக்தியடைய அவர் இந்தியா வந்தவடைந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் எரித்துக் கொலை செய்துள்ளது.

ஆன்மிகத்தை முழுமையாக உள்வாங்கி, முக்தியடைய வேண்டும் என்ற நோக்கில் 2009ஆம் ஆண்டு தமிழகம் வந்த ஜான் ராபர்ட்ஸ், திருவண்ணாமலையில் தங்கியிருந்தார். இந்து மதத்தை முழுமையாகத் தழுவிய ஜான் ராபர்ட்ஸ், சிவன் அடியாராகவே மாறிவிட்டார். 6 மாதம் அமெரிக்காவிலும், 6 மாதம் இந்தியாவிலும் வசித்துவந்த ஜான் ராபர்ட்ஸ். திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கணக்கு தொடங்கியுள்ளார்.

அந்த நிதிநிறுவனத்தின் பணியாளர் விக்னேஷ் என்பவருக்கும், ஜான் ராபர்ட்ஸுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்ட நிலையில், ஜான் ராபர்ட்ஸூக்கு திருவண்ணாமலையில் பல இடங்களை விக்னேஷ் சுற்றிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தன் தந்தைக்கு இதய அறுவைச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று 20 லட்சம் ரூபாயை ஜானிடமிருந்து விக்னேஷ் கடனாகப் பெற்றதாக கூறப்படுகிறது. அமெரிக்கா சென்ற பிறகு விக்னேஷை தொடர்பு கொண்டதில், 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் உங்களின் கடனைத் திருப்பித்தருகிறேன் என்று விக்னேஷ் கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி திருவண்ணாமலைக்கு வந்த ஜான், விக்னேஷை தொடர்புகொண்டுள்ளார். காஞ்சிபுரத்திற்கு வா பணம் வைத்துள்ளேன் என்று அவரை வரவழைத்துள்ளார், விக்னேஷ். ஜான் ராபர்ட்ஸ் காஞ்சிபுரம் வந்தவுடன், ஜீப்பில் அவரை ஏற்றிக்கொண்ட விக்னேஷ், சென்னையில் நண்பரிடம் பணம் இருப்பதாக அழைத்துச் சென்றுள்ளார். விக்னேஷை முழுமையாக நம்பிய ஜான், ஜீப்பில் சென்றுள்ளார். சுங்குவார்சத்திரம் பகுதியைத் தாண்டியவுடன் கார் ஒரு கிராமத்திற்குள் சென்றுள்ளது.

ஆள் நடமாட்டம் இல்லாத ஓர் இடத்தில் ஜீப்பை நிறுத்திய விக்னேஷ், திடீரென நைலான் கயிற்றால், ஜான் ராபர்ட்ஸின் கழுத்தை நெறுக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், தான் கொண்டுவந்திருந்த பெட்ரோலை அவரது உடல்மேல் ஊற்றி, கட்டைகளை அடுக்கி, உடலை எரித்துள்ளார். பிறகு அங்கிருந்து விக்னேஷ் துபாய்க்குச் சென்று தலைமறைவானதாகவும், ஒரு மாதத்திற்குப் பிறகு தமிழகம் திரும்பியபோது கைது செய்யப்பட்டார் என்கிறது காவல்துறை.

எரிந்த நிலையில், ஜான் ராபர்ட்ஸின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். ஆனால், ஜான் ராபர்ட்ஸ் கொலை செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆன நிலையில், இதுவரை இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது சகோதரர் கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என ஜான் ராபர்ட்ஸின் சகோதரி ஜீன் ராபர்ட்ஸ் நீதிமன்றத்தை அணுகினார்.

ஜீன் ராபர்ட்ஸின் மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை முழுமையாக தாங்களே கண்காணிப்பதாகக் கூறினர். மேலும், குற்றம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

 

Tags : #CRIME #AMERICAN #SPRITUALITY #TIRUVANNAMALAI