தம்பி மனைவியை ‘சமாதானம்’ செய்ய சென்ற அண்ணன்.. ‘கடைசியில் நடந்த ட்விஸ்ட்’.. சென்னையில் நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 14, 2020 10:03 AM

தம்பி மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்த அண்ணன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai man killed her brother over illegal affair with wife

சென்னை ஜாபர்கான்பேட்டை நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குமரேசன் (25). இவரது மனைவி சண்முகப்பிரியா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். குமரேசனின் அண்ணன் ராஜேஷ் (28), இவர் சைதாபேட்டையில் வசித்து வந்தார். திருமணம் ஆகாத ராஜேஷ் உணவு விநியோகம் செய்யும் ஆன்லைன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் பிரிந்துபோன மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு ராஜேஷிடம் குமரேசன் கேட்டுள்ளார். இதனால் சண்முகப்பிரியாவிடம் ராஜேஷ் சமாதானம் பேச சென்றுள்ளார். இதில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த விஷயம் குமரேசனுக்கு தெரியவர, உடனே அண்ணனை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ராஜேஷ் தன்னுடைய வீட்டுக்கு சண்முகப்பிரியாவை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதைப் பார்த்த குமரேசன் அண்ணனுடன் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த இரும்பு கம்பியால் அண்ணனை குமரேசன் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ராஜேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த அண்ணன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #CHENNAI