'அம்மா-மகளுடன்' சேர்ந்து... தூங்கிக்கொண்டிருந்த கணவரை 'பெட்ரோல்' ஊற்றி எரித்த மனைவி... 'திடுக்கிடும்' புதிய தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகள், தாயுடன் சேர்ந்து மனைவியே கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி(45) இவரது இவரது மனைவி அங்கம்மாள்(40) மகள் சாந்தி(20) ஆகியோர் நேற்று முன்தினம் அங்கம்மாளின் தாயார் எல்லம்மாள்(65) வீட்டிற்கு சென்றுள்ளனர். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த கந்தசாமி வெளியில் படுத்து தூங்கி இருக்கிறார்.
அப்போது மர்ம நபர்கள் சிலர் அவர் மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் கந்தசாமியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு நேற்று அதிகாலை அவர் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இறந்து போன கந்தசாமியை அவரது மனைவியே மகள், அம்மாவுடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து எல்லம்மாள், அங்கம்மாள், சாந்தி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து அங்கம்மாள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:-
வேலைக்கு போன இடத்தில் என்னுடைய கணவருக்கும், சேலத்தை சேர்ந்த சரோஜா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை கைவிடுமாறு அவரிடம் கூறியும், என்னுடைய கணவர் கேட்கவில்லை. மேலும் சரோஜாவுடன் தனியாக வாழ விரும்பி சொத்தை எங்களிடம் பிரித்து கொடுக்கும்படி அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் எங்களது குடும்பம் பாழாகிவிடும் என்பதால் மகள் மற்றும் எனது தாயார் எல்லம்மாள் ஆகியோருடன் சேர்ந்து எனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இதையடுத்து சம்பவத்தன்று தனியாக வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்த என்னுடைய கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றோம்.
என தெரிவித்து இருக்கிறார்.
கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்தது மட்டுமின்றி அங்கிருந்த 2 பைக்குகள் மற்றும் வீட்டின் முன்பகுதி ஆகியவற்றையும் தீவைத்து எரித்துள்ளனர். இதில் 2 பைக்குகளுடன் சேர்ந்து, வீட்டின் ஒரு பகுதியும் தீக்கிரையானது குறிப்பிடத்தக்கது.
