'கொரோனாவுக்கு' வெறும் 'பாராசிட்டமால்' போதும்... சர்ச்சையில் சிக்கிய 'பிரபலம்'... 'சந்திரபாபு நாயுடுவே' கலாய்த்த அந்த நபர் 'யார் 'தெரியுமா?...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 17, 2020 07:12 AM

'கொரோனா வைரசுக்கு வெறும் பாராசிட்டாமல்தான் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது' எனக்கூறி, பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அவரை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

Jaganmohan Reddy said parasitamol is sufficient for coronavirus

அமராவதியில் உள்ள ஆந்திர சட்டசபையில் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 'நாம் பயப்படும் அளவுக்குக் கொரோனா கொடுமையானது இல்லை. எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், ஏற்கெனவே வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் இந்த வைரசால் உயிரிழக்கின்றனர். இந்த வைரசுக்கு வெறும் பாராசிட்டாமலே போதுமானது. வைரஸ் பயம் இல்லாமல் மாணவர்களுக்குத் தேர்வுகள் கூட நடத்தலாம்,'' எனக் குறிப்பிட்டார்.

 

ஆந்திர முதல்வரின் இந்த கருத்தை நம்ப வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இப்படி தவறாக மக்களை வழிநடத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆந்திராவின் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில், 'கொரோனா வைரசுக்கு உலகளவில் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இது மிக மிக வேகமாகப் பரவிவருகிறது. ஆனால், முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி இந்த வைரசை பாராசிட்டாமல் மூலம் குணப்படுத்திவிடலாம் என, சாதாரணமாகக் கூறுவது அதிர்ச்சியாக அளிக்கிறது. இவர் கூறுவது நிஜமானால் அனைத்து நாடுகளும் பாராசிட்டாமல் உற்பத்தியை அதிகரித்திருக்கும். முதல்வர் கூறியதை ஏற்காமல், இந்த வைரசிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்' என, ஜெகன் மோகன் ரெட்டியைக் கலாய்த்துள்ளார்.

Tags : #ANDRA #CHIEFMINISTER #JEGANMOHANREDDY #CHANDRABHABU NAIDU #CORONA #PARACITAMAL