சிறுநீர் கழிக்க போன ‘சின்ன கேப்’.. ‘திரும்பி பார்த்தா BMW காரை காணோம்’.. அதிர்ச்சியில் உறைந்த தொழிலதிபர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 16, 2020 01:22 PM

சிறுநீர் கழிப்பதற்காக சாலையோரத்தில் நிறுத்திய காரை மர்மநபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Drunk man driving BMW stops to urinate, miscreants flee with car

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் ரிஷாப் அரோரா. தொழிலதிபரான இவர் தனது உறவினர் ஒருவரின் பிஎம்டபிள்யூ காரை சில நாட்களாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு விருந்து ஒன்றுக்கு காரில் சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்துவிட்டு, போதையில் காரை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வந்துள்ளார். அப்போது வழியில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்.

அந்த சமயம் அவருக்கு பின்னால் வந்த மர்மநபர்கள் மெதுவாக பிஎம்டபிள்யூ காரை அங்கிருந்து திருடிச் சென்றுள்ளார். சிறுநீர் கழித்துவிட்டு திரும்பிப் பார்த்த ரிஷப், கார் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே கார் திருடிபோனது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அங்கு, போதையில் காரை ஓட்டியதற்காக ரிஷப்புக்கு போலீசார் முதலில் அபாரதம் விதித்தனர்.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், கார் திருடுபோனது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இந்த காரை ரிஷப்புக்கு நெருங்கியவர்கள் திருடி சென்றிருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகிக்கிறோம். காருக்கு ரூ.40 லட்சம் வங்கிக்கடன் பாக்கி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளனர். சிறுநீர் கழிக்க சென்ற நேரத்தில் பிஎம்டபிள்யூ கார் திருடுபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.