‘கடலோர மாவட்டங்களில் எப்போது கனமழை..?’ ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 06, 2019 08:54 PM

தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy rain alert in Tamilnadu from september 9

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags : #WEATHER #TAMILNADU #CHENNAI #HEAVYRAIN #ALERT