‘ப்ளாட்ஃபார்மில் நின்ற ரயிலில் திடீரென பற்றிய தீ’..பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 06, 2019 04:39 PM

டெல்லி ரயில் நிலையத்தில் புறப்படும் நேரத்தில் ரயிலில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.

Fire breaks out in Kochuveli Express at New Delhi railway station

புது டெல்லி ரயில் நிலையத்தில் நடைமேடை 8 -ல் சண்டிகர்-கொச்சுவேலி விரைவு ரயில் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அப்போது நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் பெட்டி ஒன்றில் இருந்து திடீரென தீப்பற்றியுள்ளது. இது அங்கிருந்த பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து தகவலறிந்து ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சி செய்துள்ளனர். மேலும் ரயிலில் இருந்த பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ரயிலின் மின் சேமிப்பு பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags : #FIREACCIDENT #CHANDIGARH #KOCHUVELIEXPRESS #TRAIN #NEWDELHI