‘சிகரெட்டை பத்த வச்சு கொடு’.. ஹோட்டலுக்குள் புகுந்து தகராறு செய்த நபர்..! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 03, 2019 12:08 PM

சென்னை ஹோட்டல் ஒன்றில் குடிபோதையில் நபர் ஒருவர் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rowdy got arrested due to creating problem in hotel

சென்னை காசிமேடு பகுதியில் நாஞ்சில் ரவி என்பவர் ஹோட்டல் ஒன்று நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சென்ற நபர் ஒருவர் ஹோட்டல் ஊழியர்களிடம் சிகரெட் பற்ற வைத்து கொடுக்க சொல்லியும், ஜூஸை ஊட்டிவிட சொல்லியும் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஹோட்டல் ஊழியர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் ஹோட்டலில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தகராறில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : #CHENNAI #ARRESTED #KASIMEDU