‘ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய பெண்’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 03, 2019 02:21 PM

ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய பெண் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Karnataka Woman escapes death as train passes over her

கர்நாடகா மாநிலம் குல்பர்கா என்னும் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், பெண் ஒருவர் ரயில் நடைமேடையில் இருந்து திடீரென கீழே இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழித்தடத்தில் ரயில் ஒன்று வந்துள்ளது. இதனைப் பார்த்த பயணிகள் உடனே அப்பெண்ணை எச்சரித்துள்ளனர்.

இதனை அடுத்து அப்பெண் உடனே ரயில் தண்டவாளத்தில் உடலைக் குறுக்கி படுத்துள்ளார். ரயில் சென்ற சிறிது நேரத்தில் அப்பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தியா டுடே பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KARNATAKA #WOMAN #TRAIN