‘நாளை முதல் அமலுக்கு வரும்’.. ஆன்லைன் முன்பதிவு ‘ரயில் டிக்கெட் விலை உயர்வு’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Aug 31, 2019 08:49 PM
நாளை முதல் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதன் ஒருபகுதியாக இ-டிக்கெட்டுகளின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் அதற்கான சேவைக்கட்டணம் ரத்து செய்யப்பட்டது.
இதன்மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. குளிர்சாதன வசதியற்ற பெட்டிகளுக்கு ரூ.15, குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகளுக்கு ரூ.30 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (செப்டம்பர் 01) முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.