3 மாசத்துல 10,000 பேர் பஸ்ல இப்டி பண்ணிருக்காங்களா..? அதிர வைத்த சென்னை போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Sep 03, 2019 04:39 PM
கடந்த 3 மாதங்களில் பேருந்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் வசூலித்த அபராத தொகையை வெளியிட்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அதிர வைத்துள்ளது.
சென்னை மாநகர பேருந்துகளில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். சென்னை போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு மாதந்திர பாஸ் உள்ளிட்ட சலுகைகளை அளித்து வருகிறது. ஆனாலு சிலர் பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுக்க டிக்கெட் பரிசோதகர்கள் அடிக்கடி டிக்கெட் பரிசோதனையிலும் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடந்த மே, ஜீன், ஜீலை மாதங்களில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணித்த 10,791 பேரிடம் 16,80,850 ரூபாய் வசூலிக்கபட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் டிக்கெட் இல்லாமல் பேருந்தில் பயணித்தால் அதிகபட்சமாக 500 ரூபாய் வசூலிக்கபட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.