‘கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்’... ‘ஆசைக் காட்டிய இளைஞரின் செயலால்’... '15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 04, 2019 12:16 PM

திருமண ஆசைகாட்டி 10-ம் வகுப்பு மாணவியிடம், தவறாக நடந்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை, இளைஞர் ஒருவர், திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

youth arrested for cheating a 10th standard student in chennai

சென்னை புழல் கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரின் தாயார், மாவட்ட சமூக நல அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘அதேப் பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் மணிகண்டன் என்பவர், தனது மகளை, திருமண செய்துகொள்வதாக கூறி, அவரிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்டு, பின்னர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.  ஏமாற்றியது குறித்து மணிகண்டனிம் கேட்டபோது, ஆபாசமாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி, கொலை மிரட்டல் விடுப்பதாகவும்’ புகார் தெரிவித்திருந்தார்.

மாணவியின் தாயார் அளித்த புகாரையடுத்து, மாதவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும், போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHEATING #STANDARD #10TH #YOUTH #CHENNAI