'உண்மையான லவ் சார்'....'காவல்நிலையத்தில் இளைஞர் செய்த செயல்'...சென்னையில் நடந்த பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 03, 2019 11:46 AM

இளம்பெண் ஒருவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாக இளைஞர் காவல்நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youth compliant his girlfriend in the police station

சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியில் வசித்து வருபவர் விக்கி என்ற கீரிப்புள்ள. இவர் நள்ளிரவில் திடீரென பூந்தமல்லி காவல்நிலையத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டார். அப்போது குடிபோதையில் இருந்த அவர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தன்னை காதலித்த பெண் ஒருவர், இப்போது காரணமே இல்லாமல் காதலை நிராகரித்துவிட்டதாக கூறி கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில் காவலர்கள் அவரை சமாதானபடுத்தி கொண்டிருந்த நேரத்தில், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். நான் அந்த பெண்ணை உண்மையாக காதலித்ததாக குமுறியுள்ளார். தான் அந்த பெண்ணுக்காக செலவு செய்த 3 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொடுப்பது மட்டுமின்றி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். உடனடியாக அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், போதை தெளிந்தபின் புகார் அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்

Tags : #POLICE #LOVER #GIRL FRIEND #CHENNAI