‘மெட்ரோ ரயிலில் இதெல்லாம் பண்ணாதீங்க’... ‘ரயில் நிர்வாகம் எச்சரிக்கை’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 03, 2019 06:15 PM

பயணத்திற்கு எளிதாகவும், சிரமமின்றி சாலைகள் போன்று இடையூறு இல்லாமல் சீக்கிரத்தில் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல மெட்ரோ ரயில்சேவை உள்ளது.

Action on pasting posters in metro train sets in chennai

இந்நிலையில் மெட்ரோ ரயில் தூண்களில் பலர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதனால் மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில் ரயில் பெட்டிகள், தடுப்புகள், மற்ற கட்டமைப்புகளில் அனுமதியின்றி நோட்டீஸ், சுவரொட்டி ஒட்டுவது மெட்ரோ ரயில்வே சட்டம் 2002-ன் பிரிவு 62 இன் கீழ் சட்டவிரோதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை மீறி செயல்படுவோருக்கு 6 மாத சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. எனவே இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி, மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #CHENNAI #METRO #POSTER