‘ஆப் மூலம் பைக் புக் செய்து’... ‘காத்திருந்த ஐடி இளைஞருக்கு’... 'சென்னையில் நிகழ்ந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 01, 2019 05:57 PM

சென்னையில் இருசக்கர வாகனத்திற்கான ஆப் மூலம் வாடகைக்கு அழைத்த ஐடி நிறுவன ஊழியரை, காரில் ஏற்றி கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IT employee attacked and kidnapped by youths in chennai

கேகே நகரை சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற இளைஞர், தாம்பரத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, வடபழனி செல்வதற்காக ரேபிடோ செயலி மூலம், இருசக்கர வாகனத்தை புக் செய்துள்ளார். ஆனால் மழை அதிகமாக பெய்துக்கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சொகுசு காரில் வந்த சிலர், ஸ்ரீகுமாரிடம் பேச்சு கொடுத்து காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. காரில் இருந்த 3 பேர் திடீரென்று அவரை தாக்கியதுடன், கத்தியைக் காட்டி மிரட்டி 11 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டதாகத் தெரிகிறது.

மேலும், கால் சட்டையை கழற்றி புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு, 50,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக ஸ்ரீகுமார், காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கே.கே.நகர் போலீசார், இச்சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சரவணன், மணிகண்டன் ஆகிய இளைஞர்களை கைது செய்தனர். வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : #CHENNAI #ITEMPLOYEE #RAPIDO