'கைகளை நீட்டி.. ஏங்கும் 'கருப்பின' குழந்தை!.. 'நிறவெறி காட்டிய உணவக ஊழியர்?!' .. கலங்கவைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Nov 29, 2019 11:39 AM
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மகாணத்தில் உள்ள மெட்டாரியா என்கிற இடத்தில் சக் ஈ சீஸ் (Chuck E. Cheese) என்கிற பொழுதுபோக்கு உணவகம் உள்ளது.

இந்த உணவகத்துக்கு டாமன் பெய்ன் என்பவர், தனது 3 வயது மகளின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அங்கு மிக்கி மவுஸ் போல் பொம்மை அணிந்துகொண்டு நபர் ஒருவர் தன்னிடம் வரும் குழந்தைகளை வாரி அணைத்து, வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது வெண்ணிறத்தில் இருக்கும் குழந்தைகள் தன்னிடம் வரும்போது மட்டும், அவர்களை கைகளால் தொட்டு அணைத்துக் கொடுத்த, அந்த நபர், கருப்பினத்தவரின் குழந்தை, தனது இரண்டு கைகளையும் நீட்டி தன்னை ஏற்குமாறு மன்றாடியபோது சிலை போல் அப்படியே நிற்கிறார்.
அதற்குள் மீண்டும் இன்னொரு குழந்தை வந்து அவரின் கால்களை கட்டிப் பிடிக்கிறது. அந்த குழந்தையை அவர் தட்டிக் கொடுக்கிறார். ஆனால் ஏமாற்றத்துடனும் ஏக்கத்துடனும் நிற்கும் அந்த குழந்தைக்கு கடைசியாக கைகளை ஆட்டி, டாட்டா மட்டுமே காட்டுகிறார்.
இதனைக் கவனித்த குழந்தையின் தந்தை அந்த நபர் நிறவெறியுடன் நடந்துகொள்வதாக உணவு நிறுவனத்தில் முறையிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ வைரலாகி பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளன.
